Monday, August 4, 2008

பிரிவு

கையசைத்து பிரிகையில்
ரனமாய் கனத்தது
இதயம்!

புரட்டினேன்!
எல்லாம் உன் நினைவுகள்!

Tuesday, July 29, 2008

காதல்

கண்ணிரில் குளித்த
என் தலையனை சொல்லும்
உனக்கான
என் காதலை!

Saturday, June 16, 2007

எப்படியெல்லாம்
என்னை
செதுக்கியெடுக்கிறாய்!
கல்லாய் இருந்த நான்
உன் வீட்டு
கர்ப்பக் கிரகமாகிறேனே!!!!!
நீயும்
சிறந்த
அழகான சிற்பிதான்!!!!

Saturday, May 26, 2007

கடவுள்
என் எதிரே வந்து
என்ன வேண்டும் என்றால்
ஒரு ஜோடி
சிறகு வேண்டும் என்பேன்
உன்னோடு செர்ந்து
உல்லாசமாய்
பறப்பதற்கல்ல!!
தொலை தூரமாய் சென்று
உன்னை
மறப்பதற்க்கு!!

(எங்கோ எதிலோ படித்தது.)

Friday, May 18, 2007

தினமும் உன் மடி மீது
உறங்க ஆசை தான்... முடிவதில்லை!!
எங்கே என் உறக்கத்தில்
உன்னை பிரிந்து விடுவேனொ என்று..!!!

தினமும் உன் கை கொர்த்து
நடக்க ஆசை தான்... முடிவதில்லை!!
எங்கே என் கண்ணீரை துடைக்க
உன் கைகள் இல்லாமல் போய் விடுமோ என்று..!!

தினமும் உன் கண் பார்த்து
சிரிக்க ஆசை தான்... முடிவதில்லை!!
எங்கே என் கனவுகள்
காற்றோடு கலந்து விடுமோ என்று..!!

தினமும் உன்னோடு இருக்க ஆசை தான்...
முடிவதில்லை!!!
எங்கே என் மனம்
மரணத்தை வென்று விடுமோ என்று..!!

சொல்லவுமில்லை... சொல்ல போவதுமில்லை...
என் கனவுகளில் நீ வந்ததை...
சொன்னால் புரியாமல் பொய் விடுமோ என்று..!!

தெரியவுமில்லை.. விளங்கவுமில்லை...
நான் என்ன ஆவேன் என்று...!!!

(எங்கோ எதிலோ படித்தது.)

Monday, May 7, 2007

நீயும் பேசாதே
நானும் பேசாதிருக்கிறேன்
நாட்கள் மட்டுமல்ல
வருடங்களும் ஓடின
நீ பார்க்கும்
போதெல்லாம்
எனக்குள்
இன்னும் அதே வலி!
உனக்கும்தான் வலிக்கும்
என் பார்வை
உன்னில் படர்கையில்
ஆக..
பார்வையாகவே உயிர்த்திருக்கிறது
நம்முள் மௌனமாய்
நமக்கான காதல்!!

(எங்கோ எதிலோ படித்தது.)

Monday, April 9, 2007

தொலைந்து போன சுயம்

அன்பு மகளாய்
தோள் சாய தோழியாய்
கனவுகள் பூக்கும் காதலியாய்
பாசமிகு மனைவியாய்
பொருப்பான தாயாய்
என அனைத்துமாய் நான்
இதில் நான் நானாய் எங்கே?

(எங்கோ எதிலோ படித்தது.)