Thursday, March 8, 2007

என் தோழனே...

சோகமெனில் உன்
தோளில் சாய்ந்து
அழுது தீர்த்துக்கொள்வேன்...

மகிழ்ச்சியெனில்
உன் விரல்கோர்த்து
உயிர் மலர
சிரித்துக்கொள்வேன்...

உன்னுடனிருக்கும்
ஒவ்வொரு
நிமிடங்களும் தாய்மடியில்
நிம்மதியாய் உறங்கும்
குழந்தையாய் நானிருந்தேன்....

தங்கத்தில் வேலியொன்று
என் கழுத்தில் ஏறியதால்
உன்னைப் பிரிந்து இன்று
வெளியூர் செல்கிறேன்...

வழியனுப்ப வந்த
சொந்தங்களின் நடுவே
தோழி என்னை பிரியவும்
மனமில்லாமல் வேறு
வழியும் தெரியாமல்
தவிப்புடன் கன்னம்
நனைக்கும் கண்ணீரை
மறைத்தபடியே மெளனித்து
கையசைக்கிறாய் நீ..

உன்னை விட்டு
நகரத்துவங்குகிறது இந்த
ரெயிலும், என்
வாழ்க்கையும்..

-- நிலாரசிகன்

(இதுவும் copy தாங்க. சொந்தமா எழுதலை.)

11 comments:

Harish said...

Inda Nilaraseeganukku mattum edho special power irukkunu ninaikiren. Pichchu udarraaru...

Anonymous said...

//உன்னை விட்டு
நகரத்துவங்குகிறது இந்த
ரெயிலும், என்
வாழ்க்கையும்..//

superrrrr! i too read this nilarasigan's other kavithais.

Story Teller said...

Ah well.. thanks for sharing this nice one... keep posting such nice ones OK?...

Kavitha said...

@ Harish, ambi, Delhi tamilan
Thanks for dropping by :)

@ Delhi tamilan, Sure, I'll post more.

Syam said...

யாரு எழுதினாலும் சூப்பரா இருக்கு...இப்போ தான் உங்க first post படிச்சேன்...நீங்க சொல்லவே வேண்டாம்...இது copy னு :_)

Dreamzz said...

தோழி பிரிவை அழகா சொல்லுது இந்த கவிதை...


இப்படி நல்ல நல்ல கவிதையா பிடிச்சு போடுற உங்களுக்கு நன்றி!

Dreamzz said...

//உன்னை விட்டு
நகரத்துவங்குகிறது இந்த
ரெயிலும், என்
வாழ்க்கையும்..//

top varigal... :( enakku flashback nyabagam vandhiduchu

Dreamzz said...

//இதுவும் copy தாங்க. சொந்தமா எழுதலை.) //
onnum prichanai illa!

ippadi thaan oruthar - bharani - romba kaalama pidicha kavidhaigal enru pottut irundhaar. thideernu oru naal thaana kavidha eludha aarambichar paarunga...

opening kodukiraar

இரும்பு இதயம் எனற்கு..
காந்த விழிகள் உனற்கு..


அப்படினு சொல்லு சும்மா பட்டைய கிளப்பறாரு..

so dont worry and continue with the blog efforts :)

Arunkumar said...

Super kavithai kavitha !!!

//உன்னை விட்டு
நகரத்துவங்குகிறது இந்த
ரெயிலும், என்
வாழ்க்கையும்..//

Arumayaana varigal.
ippidi nalla nalla kavithai's suttu podunga :P

Raji said...

Super super kavidha ya pidichu podureenga..

Innum neraya pidichu mattum illa sondhama podavum vazhthukkal

நிலாரசிகன் said...

என் கவிதையை இங்கே கண்டதில்
மிக்க மகிழ்ச்சி...
தூரல் கவிதைகள் அடைமழையாக
மாறட்டும்.
நனைய காத்திருக்கிறேன்.